Saturday 20 July 2013

எடிட்டரின் ஏகாதிபத்திய அடக்குமுறை

நண்பர்களே,

முதலில் இந்த பதிவில் நடந்த காமெடிக்களை ரசிக்க சில பல ஸ்கிரீன் ஷாட்டுகள்:

Karnan L 1st Comment

2nd Comment

Karnan L 2nd Comment

3rd Comment:

Karnan L 3rd Comment

4th Comment:

Karnan L 4th Comment

Now, தர்மன் அவர்களின் முதல் கமெண்ட் (இதனை மேலும் ரசிக்க கர்ணன் அவர்களின் முதல் கமெண்ட்டை மறுபடியும் ஒரு முறை படித்து விடுங்கள்)

எடிட்டர் சார்,

நான் என்னுடைய சந்தாவினை கேன்சல் செய்துவிடலாம் என்று இருக்கிறேன். உடனடியாக நீங்கள் உங்களது பார்சல் கொரியர் டெலிவரி முறையினை மாற்றாவிடில் கண்டிப்பாக நான் என்னுடைய சந்தாவினை கேன்சல் செய்து விடுவேன். ஏனென்றால் கலாச்சாரத்திற்கு பெயர் எடுத்தவன் தமிழன் அதனால் தான் அப்படி சொன்னேன் தவறாக இருப்பின் திருத்திக்கொள்கிறேன்.

நான் இங்கே என்னுடைய சந்தாவினை மட்டும் சொல்லவில்லை. என்னுடன் மொத்தம் ஐந்து சந்தா கேன்சல் ஆகிவிடும். ஆகையால் உடனடியாக உங்கள் கொரியர் டெலிவரி முறையில் மாற்றம் கொண்டு வாருங்கள். நான் ஒரு தமிழன் என்பதை மறந்து விட வேண்டாம்.

ஃபுரபெஷனல் கொரியர் கம்பெனியின் டெலிவரி இனிமேல் எனக்கு வேண்டாம்.
நேற்று என்னுடைய சந்தா (மொத்தம் ஐந்து சந்தா, மறுபடியும் சொல்லி விடுகிறேன் - இந்த ஐந்து சந்தாக்கள் என்பதை அடிக்கடி சொல்லி உங்களை கருப்பு மெயில் செய்யும் எண்ணம் எனக்கில்லை என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்) கொரியரை கொண்டு வந்த நபர், என்னுடைய சந்தா புத்தகத்தினை தரும்போது அதற்க்கு மேலே "சௌத் ஸ்கோப்" என்கிற சினிமா பத்திரிக்கையை வைத்துக்கொண்டு இருந்தார். அதை என்னுடைய மனைவி பார்த்துவிட்டு இது போன்ற அசிங்கமான புத்தகங்களின் மீதுதானா உங்களது லயன் காமிக்ஸ் கொரியர் டெலிவரி கை எழுத்து வாங்கவேண்டும்? என்று என்னை கேள்வியால் அசிங்கப்படுத்தி விட்டார்.

உண்மையிலேயே கேட்கிறேன் - கலாசாரத்திற்கு பேர் போன நம்முடைய நாட்டில் இதுபோன்ற அசிங்கமான புத்தகங்களை ஏன் அந்த கொரியர் டெலிவரி செய்பவர் கொண்டுவரவேண்டும்? இனிமேல் இதுபோன்ற புத்தகங்கள் அவரிடம் இருந்தால் அவர் எனக்கு கொரியர் டெலிவரி செய்யவேண்டாம்.உங்களால் வீட்டில் தேவையே இல்லாமல் எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துவிட்டது. வீட்டில் பெண்களை வைத்துகொண்டு இப்படி அசிங்கமான புத்தகங்களை வீட்டில் வச்சுகிட்டிருக்கீங்களே உங்களுக்கு ஏதாவது அறிவு கிறிவு இருக்கா என்று கேட்டு ஒரே சண்டை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆத்திரத்தில் காமிக்ஸ் புத்தகத்தையெல்லாம் கிழித்து போட்டுவிடலாமா என்றுகூட தோன்றியது பல்லைகடித்துகொண்டு அமைதியாக இருந்தேன். சரி இனிமேல் இதுபோல் புத்தகம் வாங்கவில்லை என்று சொல்லி சமாதனம் செய்தேன்.

இரண்டாவதாக, வீட்டில் நான் இல்லாதபோது எதற்கு இந்த கொரியர் டெலிவரி ஆட்கள் வரவேண்டும்? நீங்கள் இனிமேல் கொரியர் அனுப்பும்போது நான் வீட்டில் இருக்கும்போது மட்டுமே கொரியர் டெலிவரி செய்யவேண்டும் என்று சொல்லிவிடுங்கள் - எங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள், அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை. அப்படி நான் வீட்டில் இல்லாதபோது கொரியர் டெலிவரி செய்வதாக இருந்தால் என்னுடைய சந்தாவை நான் கேன்சல் செய்து கொள்கிறேன்.

எங்கள் வீட்டு பெண்கள் கலாச்சரத்திற்கு பெயர் போனவர்கள். அப்படி முடியாது என்றால் எங்கள் வீட்டிற்கு கொரியர் டெலிவரி செய்யும்போது பெண்கள் வந்து டெலிவரி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். அதுவும் அவர்கள் வெறும் லயன் காமிக்ஸ் மாத்திரமே அவர்கள் கையில் வைத்திருக்க வேண்டும். வேறு எதாவது ஆபாசமான புத்தகங்கள் வைத்து இருந்தால் (அவர்களது பையை சோதனை போடுவேன்) நான் என்னுடைய ஐந்து சந்தாவினையும் கேன்சல் செய்துவிடுகிறேன். இதனை உங்களை அச்சுறுத்தும் விதத்தில் நான் சொல்லவில்லை.

அப்படி எங்கள் வீட்டிற்கு காமிக்ஸ் கொரியர் டெலிவரி செய்ய வரும் பெண்கள்

  • கண்டிப்பாக குடும்ப பாங்கான உடை உடுத்தியே வரவேண்டும்.
  • அவர்கள் டிவி பார்க்க கூடாது,
  • பத்திரிக்கைகள் பார்க்கவே கூடாது,
  • செய்தித்தாள் என்றால் என்ன என்று கேட்பவர்களாக இருக்க வேண்டும்.
  • கண்டிப்பாக மஞ்சள் பூசி, நெற்றியில் குங்கும போட்டு வைத்திருக்க வேண்டும்.
  • காயத்ரி மந்திரம் சொல்லவேண்டும்.
  • சமைக்க தெரிந்து இருக்க வேண்டும்.
  • கர்நாடக சங்கீதம் தெரிந்து இருத்தல் நலம்.
  • முக்கியமாக அவர்கள் தமிழ் மீடியம் படித்தவர்களாக இருந்து, கும்ப லக்னத்தில் பிறந்து இருக்க வேண்டும்.

அப்போது தன நான் அந்த காமிக்ஸ் புத்தகங்களை கோரியல் முறையில் வாங்குவேன். இல்லை என்றால் அவற்றை கேன்சல் செய்துவிடுவேன். சரி எப்படியோ வெளியிடுங்கள் பிடித்தால் வாங்குகிறேன் இல்லாவிடில் விட்டுவிடுகிறேன், என்னுடைய ஐந்து சந்தாவையும்.

இந்த கமெண்ட்டுக்கு வந்த வரவேற்ப்பை பாருங்களேன்

Dharman No Comment Feedback

ஈரோடு விஜய் அவர்களின் கமெண்டுக்கு தர்மன் அளித்த பதிலை எடிட்டர் டிலீட் செய்து விட்டார். இருந்தாலும் அந்த கமெண்ட் இதோ என்னுடைய மெயிலில் இருந்து: (இதனை மேலும் ரசிக்க கர்ணன் அவர்களின் முதல் கமெண்ட்டை மறுபடியும் ஒரு முறை படித்து விடுங்கள்)

ஈரோடு விஜய்,

ஒரு ஆசியனாக இருந்துக்கொண்டு இன்னொரு ஆசியனுக்கு இப்படி ஒரு ஆப்பு வைக்க உங்களுக்கு எப்படி மனம் வந்து விஜய்? (தமிழன் என்றால் பொடியன் சண்டைக்கு வந்து விடுவாரோ என்றுதான் ஆசியன் என்று எழுதினேன். இந்தியன் என்று எழுதலாம் என்றால் அது கமல் ஹாசன் படம், அவரை எனக்கு அறவே பிடிக்காது).

என்னுடைய மனைவியிடம் இந்த கமெண்ட்டை படித்து காட்டிக்கொண்டு இருந்தபோது உங்கள் கமெண்ட்டை படித்து விட்டு எங்கள் வீட்டில் ஒரே பிரச்சினை. குறிப்பாக
//கண்டிப்பா ரூம் போட்டுத்தான் //
என்கிற அந்த வார்த்தைகளை படித்து விட்டு என் மனைவி மிகவும் கோபித்து கொண்டார்கள் (ஒருவர்தான், இருந்தாலும் மரியாதைக்காக பன்மையில் எழுதி இருக்கிறேன்).

அவர் கூறியதை அப்படியே வெளியிடுகிறேன் "என்னங்க இது? இவ்வளவு அசிங்கமாக ரூம் போடுவது என்றெல்லாம் எழுதி இருக்காங்க? அப்போ நீங்க இங்கே தினமும் வந்து எடிட்டரின் கருத்தை படிக்கிறேன் என்று சொன்னதெல்லாம் இது போல ஆபாசமான விஷயங்களை படிப்பதர்க்காகத்தானா? அப்போ நீங்களும் இவர்களைப்போல ஒரு காமக் கொடூரனா? அய்யகோ, நீங்க பொண்ணு பாக்க வரும்போதே சிதம்பரம் மாமா சொன்னார், "மாப்பிள்ளையோட முழியே சரி இல்லைன்னு", ஹ்ம்ம் இவ்வளவு வருஷம் கழிச்சா உங்களைப்பத்தி நான் தெரிஞ்சுக்கனும்?


அய்யோ, அப்போ நம்ம குழந்தைகளோட எதிர்காலம் என்னாவது? இது போன்ற ஆபாசமான இணையதளத்தில் நீங்கள் பங்கு வகிக்கிறீர்கள் என்றால் நாளைக்கு உங்களையும் அல்லவா போலிஸ் அரெஸ்ட் செய்யும்? அப்போ நானும் குழந்தைகளும் நடுத்தெருவில் தான் நிக்கனுமா? எங்க உணர்வுகளைவிட இப்படிப்பட்ட ஆபாச இணையதளம் தான் உங்களுக்கு முக்கியமா? ஒன்று மரியாதையாக இந்த இணையதளத்தை விட்டு வெளியேறி வாருங்கள். ஏதாவது Rehab சென்டர் சென்று உங்களை இந்த வியாதியில் இருந்து குணப்படுத்துவோம், எவ்வளவு செலவானாலும் சரி.

இல்லையென்றால் உடனடியாக டைவர்ஸ் கொடுத்துவிட்டு மாதாமாதம் ஜீவனாம்சம் அனுப்பி வையுங்கள். உங்களை நம்பி வாழ்க்கை பயணத்தில் இதுவரை சேர்ந்து பயணம் செய்ததற்கு இதுதான் தண்டனையா? கல்யாணம் ஆன புதுசுல நீங்க குஷி படத்தை ரசிச்சு பார்த்தேன் என்று சொல்லும்போதே நான் யோசிச்சு இருக்கணும்".

இப்படி ஒரு மணி நேரத்திற்கு என்னை திட்டி தீர்த்து விட்டார். எனக்கு அப்படியே நமது இணைய தளத்தை திறந்து வைத்திருந்த கணினியை உடைத்து விடலாமா என்று கூட யோசித்து வைத்தேன். பிறகுதான் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டேன். நடந்த விஷயத்தை "ஸ்பைடர்" செந்திலிடம் உடனடியாக மனவேதனையுடன் சொன்னேன். அவர் "டெஸ்க் டாப் ஸ்க்ரீனை" மட்டும் உடைக்க வேண்டியதுதானே? CPU, HARD DISK எல்லாம் அப்படியே இருந்திருக்குமே? என்று சொன்னார். எனக்கு சிரிப்புதான் வந்தது.

இரண்டு மணி நேரங்கள் நான் பட்ட அவஸ்தை எனக்குதான் தெரியும். கணினியை ஒளித்து வைத்து விடலாமா என்றெல்லாம் கூட யோசித்தேன். ஆசிரியர் கருத்துக்களை ஒரு பதிவிலும், மற்றவர்கள் கமெண்ட்டுகளை தனியாக வேறொரு தளத்திலும் பிரித்து வெளியிட்டு இருக்கலாம்.

இந்த கமெண்ட் வேண்டும் இந்த கமெண்ட் வேண்டாம், இதை எடிட் செய்யுங்கள் இதை எடிட் செய்ய வேண்டாம் என்று நான் இனி சொல்லப்போவதில்லை இஷ்டப்பட்டால் இந்த இணையதளத்திற்கு வருகிறேன், இல்லாவிடில் வராமல் விட்டுவிடுகிறேன் அவ்வளவுதான். இனிமேல் நான் இங்கு எதையும் எழுதப்போவதில்லை இதுவே நான் எழுதும் கடைசி பின்னூட்டம். என்றாவது ஒரு நாள் நான் சொல்வதுதான் சரி என்று படும். காமிக்ஸ் ரசிகர்கள் படித்துவிட்டு மறந்துவிடுங்கள் ( என்னையும் சேர்த்தே ) விமர்சனம் வேண்டாம் ப்ளீஸ்...பை.

ஈரோடு விஜய் - எனக்கு டைவர்ஸ் கிடைத்தால் நீங்கள்தான் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்.

Dharman No Comment Feedback 2

நான் ஒன்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்: தர்மனின் அந்த இரண்டாவது கமெண்ட்டை டிலீட் செய்தது ஏன்?

எடிட்டரின் இந்த ஏகாதிபத்திய அடக்குமுறையை கேட்பவர் யாருமே இல்லையா?

1 comment:

  1. Nice article, good information and write about more articles about it.
    Keep it up
    success tips in tamil

    ReplyDelete